ஆசையின் ரீங்காரம்
By K. Kanagapushpam
அழகிய தமிழ் கவிதை
பசுந்தோல் போர்த்திய மலைகள்
பச்சைப் புல்வெளிகள்
தாயின் கருவறையின் கதகதப்பை
அள்ளித்தரும் லேசான வெம்மை
புதிதாக துளிர் விட்ட புல்லின்
நுனியில் மீதமிருக்கும் பனி
இதயத்தைத் தொட்டு வருடிச்
செல்லும் தென்றல்
மனத்திலும் நினைவிலும் மணக்கும்
சந்தன வாசம்
புத்தம் புதிய காலையில்
பூத்த புதிய மல்லிகை மொட்டு
நீல வானில் பச்சைக்கீற்றாய்
தெரியும் தென்னைமரங்கள்
வைகறை துயிலெழ கூவும் குயில்கள்
பற்கள் ஒன்றிரண்டு முளைத்த
நிலையில் பாப்பா பேசும் மழலைகள்
மரங்களின் அசைவு
குருவிகளின் பார்வை
தீண்டும் தென்றலின் இரகசியம்
கிளிகளின் கிள்ளைத் தமிழ்
இயைபோடு இணைந்துள்ள இயற்கை
எதையும் ரசிக்க விடவில்லை
நாளை
செமஸ்டர் எக்ஸாம்!!!






