காதல் வரம் வேண்டும்
By Rosni FB novels
நீயே என் ஜீவனடி கதை பகுதியின் கவிதை இது இந்த கவிதை உங்களின் மனதை தொட்டிருந்தால், ஒரு சிறிய support கொடுத்து என்னை மேலும் எழுத ஊக்கப்படுத்தலாம் 🙏✨
தொட்டவுடன்தான் சுருங்கும்,
தொட்டாசினுங்கி நீயென்று
நானும் நினைத்திருந்தேன்.
என்னறையில் தான் புழங்கும்
வாசனைதான் இப்பொழுது,
மாறும் மாயம் ஏன்?
நாள்தோறும் நீயும் வந்து,
என்னறையை தீண்டுவதால்
வாசம் மாறியதோ?
உன்னால் வந்த வாசம்,
என்னை மயக்கி போக...
நானும் வீழ்ந்து போனேன்!
உந்தன் வாசக் காற்றில்,
மென்மையான பூவிதழை போல்,
மெல்ல மெல்ல என் மனதை
வருடி சென்றாயோ?
உன்னால் வந்த காதல்,
உன்னால்தானே தீரும்.
எனக்கொரு காதல் வரம்
கொடுக்குமோ உன் இதயம்?







