கல்லூரிக் காலம்!
By மெ. கிஷோர் கான்
சமூகமும் இயற்கையும் என் கவிதையின் இரு கண்கள்; அதன் வழியே நான் உலகத்தைப் பார்க்கிறேன்… உண்மையை எழுதுகிறேன்.”
"நினைவில் நின்ற பயணங்கள்"
நினைவில் நின்ற பயணங்கள்,
நினைத்துப் பார்க்கும் தருணங்கள்
செய்த சேட்டைகள் ஒவ்வொன்றாய்
மனதில் தோன்றும் மகிழ்ச்சிகள்!
நினைவில் நின்ற பயணங்கள்,
ஒன்றா இரண்டா பட்டியலிட
கல்லூரிகால படிக்கட்டு பயணங்கள்
நினைத்தாலே இனிக்கும் நிகழ்வுகள்!
ஜன்னலோர இருக்கைக்காக நண்பர்களுக்குள்
நடந்த உலக மகாயுத்தங்கள் ஒவ்வொன்றும் நினைத்தும் முகத்தில் புன்முறுவல் பூக்கச் செய்திடுமே!
கல்லூரிச் சாலையில், அவள்கடைக்கண்
பார்வைக்காக செய்திடும் சேட்டைகள்
பேருந்து தின கொண்டாட்டத்தில்
செய்திட்ட உல்லாச அலப்பறைகள்..
எதிர்கால வாழ்க்கை பற்றிய
கவலைகள் என்பதே எதுவுமின்றி
வானம்பாடிகளாய் சுற்றித் திரிந்த
பொற்காலம் மீண்டும் வராதா?
மெ. கிஷோர் கான்






