அது அப்படித்தான்!
By மெ. கிஷோர் கான்
காதலும் அதன் வலியும் வீரியமும்!

அது அப்படித்தான்!

நீ என்னை முழுதாய் மறந்துவிட
முயற்சி செய்கிறாய்!
அதில் நீ வெற்றியும்
பெற்றிருக்கலாம்! -ஆனால்
உன் ஞாபகம் எனக்கு
ஒவ்வொரு நொடியிலும் இருக்கிறது!

நான் உன்னுடனான
அந்த இனிமையான
தருணங்களை நினைத்து
என் பொழுதுகளை கழிக்கிறேன்!

நீ வேண்டுமானால்
என்னை மறந்து விடு
அது உன் விருப்பம்! -ஆனால்
நான் எப்போதும் போல்

உன்னை நினைத்துக் கொண்டே
வாழ்ந்து விடுகிறேன்!
அதெப்படி என்ற கவலை உனக்கு வேண்டாம்
அது அப்படித்தான்!