தீண்டத் துடிக்கும் தென்றல்
By மெ. கிஷோர் கான்
காதலின் தீவிரம்
உன்னைத் தீண்டத் துடிக்கும் தென்றலைக்கூட
தனிமைத் தீவினில் சிறை செய்வேன்!
உன்னை அடைந்திட எண்ணும் கனவைக்கூட
அந்தகாரச் சிறையினில் அடைத்து வைப்பேன்!
உன்னை வென்றிட நடக்கும்
போர்க்களத்தில்,
நான் ஒற்றை ஆளாய்ப் போரிடுவேன்!
உன்னை ஏறிட்டு பார்க்கும் கண்களையெல்லாம்
அவரவர் இமைகளில் வைத்தே பூட்டிடுவேன்!
நொடிப்பொழுதேனும் உன்னோடு சேர்ந்து வாழ்ந்திட,
நிலவையும் பூமியில் பிடித்து வைப்பேன்!
பூங்கரம் பற்றி உலகினை வலம்வர,
புதிதாய்ப் புட்பக விமானத்தை வரவழைப்பேன்!
உன்னைத் தொடர்ந்து வரும் நிழைலைக்கூட
ஒரு எல்லைக்கு மேல் தடுத்திடுவேன்!
நீ வெளிவிடும் மூச்சுக் காற்றையும்,
புதியதொரு கிரகத்தில் சேர்த்து வைப்பேன்!
மெ. கிஷோர் கான்






