மொசு,மொசு பூனை- ஹைக்கூ கவிதைகள்...
By Kannan
ஹைக்கூ கவிதைகள்.
மொசு, மொசு பூனை – ஹைக்கூ கவிதைகள்
மொசு, மொசு பூனை –
முதலில் பயம் காட்டும்,
பின் மடியில் தங்கும்.
சுவர் மீது நிழல் –
மெல்ல நடந்துவருது
மீசை தொட்டு சென்றதே!
பால் கிண்ணம் காலி –
பாவம் போல முகம் வைத்து
பார்வையால் கேடும்.
வெயில் தழுவும் மதியம் –
வீட்டின் ராஜாவாய்
விழிகள் மெதுவாய் மூடும்.
குழந்தை சிரிப்பு –
பூனை துள்ளி விளையாடும்
காலம் நெஞ்சில் நிற்கும். 👍
(V R K)
(69 Words)






