நீயின்றி நானில்லை
By மெ. கிஷோர் கான்
காதல்
நான் உனக்கு என்ன என்று
என்னவள் கேட்டாள்?
சொல்கிறேன் கேளுங்கள்
அவளிடம் அல்ல உங்களிடம்!
என் மனதை மனம் வீசச் செய்தவள்,
என் வாழ்க்கை எனும் தோட்டத்தில்
பூத்துக் குலுங்கும் ரோஜாக்கள் அவள்!
நீண்ட நெடிய
ஓய்வில்லா உழைப்புக்குப் பின்
கிடைக்கும் ஓய்வு நேரத்தில் முதலில்
நான் தேடுவது அவள் முகமே!
சமயங்களில் என்னுடைய
பரபரப்பான நேரங்களிலும் அவளையே
என் மனம் தேடுகிறது!
இன்னும் சொல்வதற்கு நிறைய இருக்கு,
எப்படி, எங்கு சொல்வதென்று
உண்மையிலேயே எனக்கு தெரியாது!
அன்பாக இருந்தாலும்,
ஆழமான வார்த்தைகளாக இருந்தாலும்
அதை வெளிப்படுத்துவதில்
சற்று திறமை குறைந்தவன் தான்!
ஆம்! மொத்தத்தில்
நீயின்றி நானில்லை,
நானின்றி நீயில்லை!
ஆக எனக்கு எல்லாம் நீதான்!
மெ. கிஷோர் கான்






