புரிந்து கொள் மானிடா!
By மெ. கிஷோர் கான்
மறைந்து வரும் உயிரினங்களைக் காக்க உறுதி கொள்!
ஓ மானிடா!
சட்டம் போட்டா
இதையெல்லாம் செய்யச் சொல்லனும்?
பொதுவாகவே உனக்கு இந்த அக்கறை இருக்க வேண்டாமா?
பூவுலகை ஆள்வதற்கு தகுதியானவன்
நீதான் என்றே இறைவன்
உனக்கு சில பிரத்தியேக
சலுகைகள் அளித்து அனுப்பியுள்ளார்!
அந்த சலுகைகளை
நீ நல்லவிதத்தில் பயன்படுத்தி
நீயும் மகிழ்ந்து
மற்ற ஜீவராசிகளையும்
பொறுப்புடன் காத்திட வேண்டாமா?
அது உன் கடமையும் தானே!
நீ கடமை தவறினால்
உன்னைவிட சிறந்த படைப்புக்கு
அந்த சலுகைகளை அளித்து
உன்னிடத்தில் அவனை வைத்து
அழகு பார்க்க இறைவனுக்கு
முடியாதா என்ன?
நிதர்சனத்தை புரிந்து
நீயும் நடந்து கொள்!
பூமியில் அமைதி என்றும் நிலவிட
உறுதி கொள்!
“சுவர்களில் சிறகுகளின் நம்பிக்கை தேடுகிறது... மனிதன் கட்டிய நகரங்களில் பறவைகளுக்கு வானம் கூட வாடகையாகிப் போனதே!
கூடு கட்ட மரமில்லை, ஒதுங்கிக் கொள்ள ஓரமில்லை... கான்கிரீட் காடுகளுக்குள் குரலிழந்து தவிக்கிறது சிறு உயிர்களின் உலகம்!
பறவைகளுக்காக ஒரு செங்கல்லில் கூட கருணையை செதுக்க வேண்டிய காலத்தில் வாழ்கிறோம் நாம்...
மரங்களை வெட்டிய கைகள் இன்று ‘Swift Bricks’ வைத்து பாவமன்னிப்பு தேடுகின்றன!
இயற்கையோ கோபப்படவில்லை... ஆனால் மௌனமாக அழுகிறது!”






