லிட்டில் பெண்ணே!
By மெ. கிஷோர் கான்
கவிதை
"விட்டில் பெண்ணே!"
காதல் ஓரிடம்
கடிமணம் வேறிடமெனும்
நவீன பாரதிகள்தாம்
எத்துணை, எத்துணை?
பெண்ணே!
விளக்கினில் வீழ்ந்திடும்
விட்டிலாய் நீ மாறிடாதே..
மலர்ந்து
மனம் வீசும் முன்னே
கருகிடத்தான் நீ நாடிடாதே..
காதல் எனும்
காகிதப் பூவால் உனக்கு
என்ன கிடைத்துவிடப் போகிறது?
கர்ணம் தப்பினால்
மரணமெனும் காதலால்
வாழ்க்கையில் நீ சாதிப்பது என்ன?
காதல் தவிர வாழ்க்கையில் ஒவ்வொருவரும் சாதிக்க வேண்டியது
ஏராளம் உண்டு!






