யாரோ அவள்
By கிறுக்கன்
காதல் கவிதை
உன்னை கண்டதினால்,
சூரியனுக்கும் சந்திரனுக்கும்
போர் தொடங்கியதடி!
அதில் நிலவு தோற்றதடி!!
தோற்றதால் தானோ
வளர்பிறையும் தேய்பிறையாக மாறியதடி!
உன் மூச்சு காற்று படவே
வாடை காற்றும்
தென்றல் காற்றாக மாறியதடி!!
காடுகளும் உயிர் வாழுதடி!!
நிலவினை அடைய எழுந்த அலைக்கடலும்
உன் கால்களில் தஞ்சம் புகுந்ததடி!!!
உன் குரலை கேட்டாலே
குயில்களும் தோற்றுவிடுகிறதடி!!!
உன்னை எழுதையில்
என் பேனா முள்ளும்
உன்னைக் காணவேண்டுமென
எழுத மறந்ததடி!!!!







